மலட்டு மரபணுமதுநுரை நனைந்த கண்டம்

நுண்திரை விழிநுகர்வு

சிறுதிரை சுழியில் சிக்கிய கொடுமூளை

மாதிரையின் முன் மண்டியிட்ட மனிதம் 


கையூட்டுக்கு காக்கி 

கற்பழிக்க காவி 

கரை சுரண்ட கறைவேட்டி

பெண்கருவழிக்க ரவிக்கையணியாளின்
மார்தரா கள்ளிப்பால் 

உயிரணுவற்றவனின் துணைக்கு 
மலடிப்பட்ட மகுடம் 

வீதியில் செவியடைத்து செத்தவனை சீந்தாது 
காதலியின் கரம்பிடித்து காமப்பயணம் 

கால் செத்தவள் நிற்க 
மனம் செத்தவன் அமர்ந்திருக்கிறான் 

கொட்டுமழையில் இனம் அழிய 
குளிர்வறையிலிருந்து குடையறிக்கை

வேசியிடம் கடன் சொல்லும் 
காமபாக்கியவான்கள் 

அனைத்தும் ஒரே குறையால் 
ஜெனிடிக் அப்செஷன் ……………………

Advertisements
Published in: on November 20, 2009 at 4:15 pm  Comments (27)  

The URI to TrackBack this entry is: https://vijaykavithaigal.wordpress.com/2009/11/20/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%a3%e0%af%81/trackback/

RSS feed for comments on this post.

27 CommentsLeave a comment

 1. மிக மிக அருமையாக எழுதியிருக்கிங்க..

 2. ரொம்ப ரொம்ப நன்றி சந்ரு விஜய்

 3. மிகவும் ரசித்துப் படித்தேன் நல்ல கவிதை

 4. @ தியாவின் பேனா நெஞ்சார்ந்த நன்றி தங்களின் தொடர் ஊக்கத்திற்கு விஜய்

 5. கொஞ்சம் விளங்கியும் விளங்காமலும் பொறுக்கியெடுத்துப் போகிறேன் கொஞ்சத்தை விளங்கிகொள்ள. //பெண்கருவழிக்க ரவிக்கையணியாளின்மார்தரா கள்ளிப்பால் உயிரணுவற்றவனின் துணைக்கு மலடிப்பட்ட மகுடம் //விஜய் அருமை அருமை.

 6. ரொம்ப நன்றி ஹேமா விஜய்

 7. பிரம்…மாதம். விஜய்..கலக்கல்.வார்த்தைகள் அருமையாகவும் கோர்வையாகவும், வீரியமாகவும் விழுந்துள்ளன.

 8. //பெண்கருவழிக்க ரவிக்கையணியாளின்மார்தரா கள்ளிப்பால் //மலட்டு மரபணுவின் முரட்டு குணங்களாய்…அருமை விஜய்.

 9. //கொட்டுமழையில் இனம் அழிய குளிர்வறையிலிருந்து குடையறிக்கை//அருமை விஜய் அண்ணா…

 10. நன்றி ஸ்ரீராம் இலவச அரசு என்று நான் கூறியதை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி விஜய்

 11. பின்னூட்ட கவி சங்கருக்கு எப்பொழுதும் எனது நன்றிகள் கோடி விஜய்

 12. நன்றி தம்பி புலிகேசி விஜய்

 13. கால் செத்தவள் நிற்க மனம் செத்தவன் அமர்ந்திருக்கிறான்…ஒரே குறையால் ஜெனிடிக் அப்செஷன்….இனி நான் என்ன சொல்ல..???

 14. நன்றி சிவாஜி சங்கர் விரைவில் தொடர்பு கொள்கிறேன் விஜய்

 15. //கையூட்டுக்கு காக்கி கற்பழிக்க காவி கரை சுரண்ட கறைவேட்டி//அருமை இந்த வார்த்தைகள் நல்லா இருக்கு விஜய் மலட்டு மரபணு

 16. விஜய் நீங்க கொடுத்த அஸைன்மெண்டை எழுதிட்டேன் வந்து பார்த்து நிறை குறை சொல்லுங்க

 17. வாழ்த்துக்கு நன்றி சகோதரி பார்த்திட்டேன் யாரையும் புண்படுத்தாமல் மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் விஜய்

 18. Superb! Superb! Best wishes for your future Kavithaigal! Vidya Senthil, Madurai.

 19. thanks very much vidyasenthil

 20. !!!

 21. நன்றி மக்காவிஜய்

 22. ரசித்தேன் வரிகளைஅருமை அருமை..

 23. நன்றி சகோதரி விஜய்

 24. கொட்டும் மழையில் இனமழியகுளிரறையில் குடையறிக்கை-இனத் துரோகிகள் நல்ல பதிவு

 25. தங்களின் தொடர் வருகையால் நான் மகிழ்வடைந்தேன் மிக மிக நன்றி விஜய்

 26. ரொம்ப நல்லாயிருக்கு விஜய்…இத்தனை அவ்லங்களில் ஊடே எப்படி அமைதியாய் வாழ்கிறோம் நாம்…

 27. நமது வாழ்க்கை முறை அப்படி ஆகிவிட்டது சகோதரி நன்றி விஜய்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: