மாண்புமிகு பிச்சை

இடுங்கிய கேட்ராக்ட் கண்கள்
சீப்பரியா சிக்கு மயிர் 
சிரிப்பரியா காய்ந்துதடு

நெஞ்சுக்கூடு காட்டும்
சல்லடை சட்டை

ஒட்டிய வயிறு
வெற்று வட்ட தட்டு போல 

கிழிந்த மூட்டைக்குள்
மாற்றாத சட்டையும்,
குடும்ப படமும்

யாரோ ஒருவனின் தந்தை
எவனோ ஒருவனின் சகோதரன்

அனுதினம் ஆலய வாசல்
உய்விக்க மறுத்த இறைவன் 

ஒருவேளை சோறிடு
போதுமென்று சொல்ல வை

அவன் கண்களில்
இறைவன் நீ………………. 

Published in: on November 22, 2009 at 10:15 am  Comments (34)  

The URI to TrackBack this entry is: https://vijaykavithaigal.wordpress.com/2009/11/22/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88/trackback/

RSS feed for comments on this post.

34 CommentsLeave a comment

  1. ஹைய்யா நான் நானுங்க முதல்ல இடம்பிடிச்சேன்..கவிதை நல்லாயிருக்கு சகோதரரே..

  2. தங்களின் முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி நீண்ட நாட்களுக்கு பின் வருகை தந்தமைக்கும் நன்றி விஜய்

  3. //கிழிந்த மூட்டைக்குள் மாற்றாத சட்டையும், குடும்ப படமும்//கண்கள் கலங்கிய வரிகள் விஜய்..

  4. நன்றி மக்காநானும் உங்களை மாதிரி எழுதணும்தான் பாக்கிறேன் முடியலையே விஜய்

  5. யாசித்த மனிதனுக்கு யோசித்து சட்டைப்பை தடவி தொட்டு விழுந்த ஒற்றை காசு எழுப்பிய ஒலியில் திறந்தது பசியடைத்த செவிகள்..

  6. பின்நூட்டகவிதையே ரொம்ப சூப்பரா இருக்கு சங்கர் நன்றி விஜய்

  7. கவிதை நன்றாக இருந்தாலும் கருத்தில் மாறுபாடு உண்டு. எல்லோரும் பாவம் இல்லை..

  8. நானும் உடன்படுகிறேன் ஸ்ரீராம் தங்களது தொடர் வருகைக்கும் ஊக்கத்திருக்கும் மிக்க நன்றி விஜய்

  9. pangali kalakurada

  10. நன்றிடா பங்காளி ஊருக்கு போய்டீயாவிஜய்

  11. யாராச்சும் ஆன்மீகவாதிகள் வந்து சரியா பதில் சொல்லுங்களேன்.ஆனால் சிலபிச்சைக்காரர்கள் சோம்பேறித்தனத்தாலேயே பிச்சை எடுக்கிறார்கள் என்பது என் கருத்து.அவர்கள் பழகிவிட்டார்கள்.

  12. //ஒருவேளை சோறிடுபோதுமென்று சொல்ல வைஅவன் கண்களில்இறைவன் நீ………………. //விஜய்,சுட்டிக்காட்டும் நீயும் இறைவன் தான்.வியந்தேன்.

  13. //ஒட்டிய வயிறு வெற்று வட்ட தட்டு போல //அனைவரும் அறியவேண்டிய உண்மையான இடுகை……….

  14. சோம்பேறித்தனமும் பாதிபேரிடம் உண்டு. உண்மையான் ஊனத்தால், குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு ஹேமா நன்றி விஜய்

  15. நன்றி சத்ரியன் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் தங்களின் கவிதை கண்டு அசந்தேன் விஜய்

  16. மிக்க நன்றி ஊடகன் விஜய்

  17.  //அவன் கண்களில் இறைவன் நீ………………. // நல்லாருக்கு

  18. Pichaikkarargal ungal kavithaiyai vaasithal migavum santhoshama unarvargal! Avargalukku piditha varthai "SORUIDU'. Fantastic Lyrics – Vidya Senthil, Madurai.

  19. நன்றி உழவன் நன்றி வித்யா செந்தில் விஜய்

  20. மனசைக் கரைக்குது.

  21. நன்றி விக்னேஸ்வரி தங்களின் வருகைக்கும் உணர்வுக்கும் விஜய்

  22. நல்ல கவிதை.போதுமென்று சொல்ல வை…அருமை!

  23. நன்றி வேல்ஜி தங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் விஜய்

  24. Can India Ever Overcome Its Huge Poverty Problem? It Depends On What Plan The Country Takes. Today, India Appears To Have Many Approaches To Tackling Poverty. The First Is Essentially To Bring To An End The Poor, Rather Than Poverty.யோசிக்க வேண்டிய விஷயம் அண்ணா….

  25. நன்றி சிவாஜி சங்கர் தங்கள் பகிர்விற்கு விஜய்

  26. அழுத்தமான கவிதை.வாழ்த்துக்கள்… விஜய்

  27. நன்றி நண்பர் அரசு விஜய்

  28. உணர்வு மிக்க கவிதை..அண்ணே இவுங்களுக்காக இந்த அரசு திட்டம் போடுது ஆனா செயல்படுத்துறதில்ல….

  29. நன்றி அன்பு தம்பி புலிகேசி விஜய்

  30. இதையாவும் உணராமல் இருப்பது போததென்று இல்லாததற்கு ஆசைபடுகிறேனோ எனத் தோன்றியது இதை படித்ததும்….

  31. நன்றி சகோதரி தமிழ் விஜய்

  32. //அனுதினம் ஆலய வாசல் உய்விக்க மறுத்த இறைவன் //உண்மை விஜய் நானும் இப்படி நினைத்து இருக்கிறேன்

  33. நன்றி சகோதரி விஜய்

  34. test


Leave a reply to பா.ராஜாராம் Cancel reply