தெய்வப்பா

தொந்தியுடை துதிக்கையானின் துவிகரம் பற்றி
நந்தியுறை நாதனின் கங்கைச்சிரம் – பணிந்து
அந்திமதி மெல்லியள் அங்காளி துதித்து
சிந்திய வெண்பாவுனக்கு வடிவேலே


துள்ளிக் காவடி தூக்கி துணை
வள்ளி சமேத காட்சி – நெஞ்சில்
அள்ளி தெளித்த தமிழில் உன்னழகைக்கண்டு
வெள்ளி முளைத்து வீழுமே


ஏவல்பிணி எரித்து எனையாட்கொண்டு கொக்கரிக்கும்
சேவல் கொடியோனே மனதொடிந்த – மங்கையர்க்கு
காவல் உனையன்றி வேறெவர் பூவுலகில்
அவல்சுவை மாலின் மருமானே


(ஒரு சிறு முயற்சி தவறு இருந்தால் மன்னிக்கவும்)

Advertisements
Published in: on November 26, 2009 at 5:34 pm  Comments (26)  

The URI to TrackBack this entry is: https://vijaykavithaigal.wordpress.com/2009/11/26/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/trackback/

RSS feed for comments on this post.

26 CommentsLeave a comment

 1. நன்று…

 2. துள்ளிக் காவடி தூக்கி துணைவள்ளி சமேத காட்சி – நெஞ்சில்அள்ளி தெளித்த தமிழில் உன்னழகைக்கண்டுவெள்ளி முளைத்து வீழுமே//எத்தகை துன்பம் வந்து வித்தகை செய்தாலும் இத்திகை போற்றும் வேலோனின் திருத்தகை தந்திடும் கிருத்திகை போற்றி..நானும் எழுதினேன் விஜய் (முருகன் என் இஷ்ட தெய்வம்)அருமை விஜய்..

 3. நன்றி தம்பி புலிகேசி விஜய்

 4. நன்றி சங்கர் நீங்களும் நம்மாளா ?வாழ்த்துக்கள் விஜய்

 5. மிக அருமைங்க விஜய். அந்தப் படமும் வெகு அழகு.

 6. நன்றி தங்களின் வாழ்த்துக்கு விஜய்

 7. அண்ணா மன்னிக்கவும்….பெரியார் வாழ்க..!!

 8. முருகனுக்குப் பாமாலை… நன்று. பிள்ளையார், சிவன் பார்வதி, கிருஷ்ணன் என்று அவர்களையும் கவிதையில் இழுத்து விட்டீர்கள். முருகன் எனக்கும் இஷ்ட தெய்வம்.வாயில் அடிக்கடி முருகா என்ற சொல்லே வரும்! அது சரி, முருகனைக் கொண்டாடும் நாம், பார்வதியை அங்காள பரமேஸ்வரியைத் துதிக்கும் நாம், ஏன் வள்ளி, தெய்வானையை (தனியாய்) வணங்குவது இல்லை?

 9. Deivappa! Deiveeka ppa! Kavithai eludhi engal manadhai kollai aditha neengal God Murugananin manathaiyum kollai adithu vitteergal! God Muruganin poorana arul ungal kudumbathai eppodhum kappattrum – Vazhthukkal! —- Vidya senthil, Madurai.

 10. Thanks vidyasenthil vijay

 11. அதனாலென்ன சிவாஜி சங்கர் பெரியாரும் வாழ்ந்த தெய்வம்தானே நன்றி விஜய்

 12. நன்றி ஸ்ரீராம் மாமியார் மருமகள்கள் பிரச்சினையோ?ஆனால் யோசிக்க வேண்டிய கேள்வி மிக்க நன்றி விஜய்

 13. என்னுடையது அன்பே சிவம்….ஆனால் போட்டோவில் உள்ள சிவனைவிட உங்களின் கவியில் வரும் சிவன் மிகவும் அழகாக தெரிகிறான்…நன்றாக இருக்கிறது…

 14. நன்றி கமலேஷ் தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் விஜய்

 15. வாழ்த்துகள் விஜய். முயற்சி வெல்லட்டும்.

 16. நன்றி அரசு விஜய்

 17. நன்றாக இருக்குங்க சகோதரே..

 18. ரொம்ப நன்றி சகோதரி விஜய்

 19. சிறப்பாக உள்ளது விஜய்.(பிழையறியும் திறன் எனக்கில்லை.அப்புறம் எங்கே மன்னிப்பது.?)

 20. நன்றி தோழாவிஜய்

 21. பக்தி மாலை இறைவனடி சேரும்… நல்ல முயற்சி நல்லாவும் இருக்கு விஜய்…

 22. சிறு முயற்சியை வாழ்த்திய சகோதரிக்கு மிகுந்த நன்றி

 23. வெண்பா வேந்தராகி விட்டீர்களே விஜய்!!! அருமை!!!

 24. நிறைய தவறு இருக்கும் என நம்புகிறேன் சகோதரி இருந்தாலும் உங்களது வாழ்த்து எனக்கு ஊக்கம் விஜய்

 25. விஜய்,இதென்ன தேவாரமா ?படிச்சுப் பார்க்க நல்லாவே இருக்கு.ஆட்டுவிப்பவன் அவனே.பிறகென்ன நாங்கள் இதில் மன்னிக்க !

 26. நன்றி ஹேமா நீங்கள் எப்பவும் என்னிடம் உள்ள குறைகளியே நிறையாக்குவது நீங்கள்தானே நன்றி விஜய்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: