விஞ்ஞிய ஞானம்


ராட்சத சிறகுகளின் 
ரகசிய உற்பத்தி

சதுரப்பெட்டியின்னூடே
சமைக்கும் நட்பு

விரல்நகவில்லையில்
விண் தொடர்பு

ஆழியினாழத்தில் 
அகலப் பாதை

கதிரோனின் கற்றைகள் 
கரும் சேமிப்பறையில்

அகவணுச்சிதைவை
அறுக்கும் கருக்கொடி திசுக்கள்

அட்டையின் உரசலில் 
ஆயிரமாயிரம்

மரபணு மாற்றத்தால் 
மலடான கத்தரி

கருவரைக்காமம் 
கண் மூடிய கடவுள்

ஞானம் விஞ்ஞியதால்…………………..


Advertisements
Published in: on November 30, 2009 at 7:25 pm  Comments (30)  

The URI to TrackBack this entry is: https://vijaykavithaigal.wordpress.com/2009/11/30/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

30 CommentsLeave a comment

 1. விஞ்ஞான வளர்ச்சியை வெகுவாய் சொல்லிட்டீங்க….விஞ்ஞான மாற்றத்தில் மருகியது நம் மெய்ஞானம்..//கண்மூடிய கடவுள்…//இது தானே இவர் வேலை

 2. விடுபட்ட முன்னிரண்டு பதிவுகளையும் படித்துவிட்டேன் விஜய்..

 3. தற்காலங்களில் இந்த விஞ்ஞானம் அழிவுக்கு தான் பெரும்பாலும் பயன் படுகிறது. நல்ல கவிதைங்கண்ணா…

 4. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த சகோதரிக்கு மிக்க நன்றி விஜய்

 5. எனதருமை தம்பிக்கு மிக்க நன்றி விஜய்

 6. விஞ்ஞானத்தை விளக்கினாலும் 'காஞ்சி' பாதிப்பா என்று எண்ணத் தோன்றிய கடைசிவரிகள்…தேவ ரகசியம் நாதனுக்கே வெளிச்சமா?

 7. அந்த பாதிப்பும் இருக்கலாம் ஸ்ரீராம் நன்றி விஜய்

 8. //மரபணு மாற்றத்தால் மலடான கத்தரி..//விஜய்,இந்த வரியில் "மலடாக்கும் கத்தரி" என்பதுதான் பொறுத்தமாயிருக்கும் என்பது என் கருத்து.விஞ்ஞானம் ….. வியப்பதற்கொன்றுமில்லை…ஞானம்…உணர்ந்தால்!

 9. விஞ்ஞானம் மெய்ஞானம் எல்லாமே அற்புதமாய் வருகிறது விஜய் உங்களுக்கு …கை கொடுங்க

 10. மலடாக்கும் என்பதை விட மலடாகும் என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா விஜய்

 11. சகோதரி பயணம் நல்ல படியாக இருந்ததா ?உங்களது ஆதரவும் வாழ்த்தும் எப்பொழுதும் எனக்கு உண்டு என்பதை அறியும் போது மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது நன்றி சகோதரி விஜய்

 12. Thanks VIJAY

 13. It's allright sistervijay

 14. அன்பு விஜய் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.என்னைத் தேடியிருந்தீர்கள்.ஒரு வாரம் மாவீரர் தினத்தோடு வீட்டில் அண்ணா குடும்பம்.அவர்கள் இன்றுதான் போனார்கள்.வீடு வெறுமை.மனசு உடம்பும் சரில்ல.அதான் நிறையத் தூங்கப்போறேன்.2- 3 நாள் இன்னும் விடுமுறை எடுக்கிறாள் குழந்தைநிலா.

 15. விஜய் ,என்னதான் விஞ்ஞானம் சொன்னாலும் கடவுளையும் வம்புக்கு இழுக்காமல் இருக்க முடியவில்லையே !

 16. நல்லா இருக்கு விஜய்!

 17. தோழமையே இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

 18. நன்றி ஹேமா அவரை வம்புக்கு இழுத்தால்தான் நமக்கு நிம்மதி விஜய்

 19. நன்றி மக்காவிஜய்

 20. மிக மிக நன்றி சகோதரி அவ்விருதுக்கு நான் தகுதியானவனா என்று தெரியாது ஆனாலும் சகோதரியின் அன்புக்கு அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன் எனது நெஞ்சார்ந்த நன்றி விஜய்

 21. ஜீனியஸ் சார் நீங்க..சரியான கவிதை…

 22. ஐயோ கமலேஷ் நான் கவிதைல ஜூனியர் மிக்க நன்றி விஜய்

 23. Kavithaiyai purindhikolla kadavule! enakku pudhu moolaiyai koduppa! Arivarndha sindhanai! Comment panna enakku thagudhi irukkannu theriyalai. Naan ennum valaranum endru ninaikkiren! Vazhathukkal! Vidya Senthil, Madurai.

 24. thanks a lot vidya senthil vijay

 25. மெஞ்ஞானத்தை விஞ்சிய விஞ்ஞானம் இல்லை ஞானம் தவிர்த்து வானம் துளைக்கும் பானமெல்லாம் பஸ்பமே..நன்றி விஜய்…

 26. சங்கர் வேலை பளு அதிகமோ அதற்கிடையில் வாழ்த்தியமைக்கு நன்றி விஜய்

 27. சரியான தலைப்பு

 28. மிக்க நன்றி உழவன் விஜய்

 29. //மரபணு மாற்றத்தால் மலடான கத்தரிகருவரைக்காமம் கண் மூடிய கடவுள்//:)கை கொடுங்க அண்ணா…

 30. நன்றி சங்கர் கைகொடுத்து விட்டேன் விஜய்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: