காதல் எக்ஸ்டஸி

பிரமச்சரியம் குலைத்ததுனது 
முதல் பார்வை 

நிதம் சுழன்றதுன்
நினைவுத் திகிரி 

நாக்குலர்ந்து நடுங்கி 
வாக்குரைத்த  காதல்  
 

குரும்பூடலுக்கு பிறகு 
குனிந்து நவின்ற குறுஞ்சிரிப்பு 

லட்சண சாத்திரத்தின்
உச்ச பாத்திரம் நீ

இருவிழி தியானத்தில் 
அடங்கியதெனது ஆழ்மனம்

அரவப்பின்னல் அசைய 
படமெடுத்தாடுமெனது குண்டலினி 

சுளிக்கிய சிரிப்பை 
க்ளிக்கிய அகப்படம் 
நெஞ்சப்பைதனில்

காற்சதங்கை  மணி 
எனதுயிரிசையின் ஜி மேஜர் 

காற்று திறந்த கதவில் 
உன் வருகை 
சுகந்த ஆக்சிஜன் 
நுரையீரல் நிரப்பியபடி 

தழுவ கரம் பிடிக்க,
வேண்டும் என்றே விலக்கினாய்

திமிங்கலச் சந்தையில்  
அயிரை மீன்கள் அபூர்வம் 

உச்சத்தின் மிச்சத்தில் 
குழந்தைகளாய் நாம் 

பெருமழைக்கு பின் 
இலைநுனி கசியும் 
துளிநீராய் நாசியில் 
குங்கிலிய குமிழ்நீர் 

நாநுனி கலந்து 
பிரிப்பது எவனென்றேன்

கடவுளொருவன் இருப்பது 
தெரியாமலேயே………………. உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ 
நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.Advertisements
Published in: on December 8, 2009 at 9:54 am  Comments (58)  

The URI to TrackBack this entry is: https://vijaykavithaigal.wordpress.com/2009/12/08/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b8%e0%ae%bf/trackback/

RSS feed for comments on this post.

58 CommentsLeave a comment

 1. வெற்றி பெற வாழ்த்துக்கள் விஜய்காதல்ரசம் சொட்ட… கனிரசத்தின் சுவையோடு காதல் கவிதை இனிக்கத்தான் செய்கிறது…

 2. மிக்க நன்றி சகோதரி விஜய்

 3. லட்சண சாத்திரத்தின்உச்ச பாத்திரம் நீஇருவிழி தியானத்தில் அடங்கியதெனது ஆழ்மனம்ரொம்ப அழகாக இருக்கிறது நண்பரே..வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..திகிரி என்றால் என்ன அர்த்தம்…

 4. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா…கவிதையில் காமமும் காதலும் நிரம்பி வழிகிறது..

 5. நின்னு விளையாடுதுங்க வரி யெல்லாம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

 6. @ கமலேஷ்மிகுந்த நன்றி கமலேஷ்திகிரி என்றால் சக்கரம் விஜய்

 7. @ புலவன் புலிகேசி மிக்க நன்றி தம்பி விஜய்

 8. @ நேசமித்ரன்நன்றி சகோதராஏதோ உங்க நிழல்ல எழுதிட்டு இருக்கோம் விஜய்

 9. //லட்சண சாத்திரத்தின் உச்ச பாத்திரம் நீ//அருமை விஜய்

 10. //திமிங்கலச் சந்தையில் அயிரை மீன்கள் அபூர்வம் // இது அருமையோ அருமை விஜய் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா

 11. நன்றி சகோதரி உங்களின் வாழ்த்தே எனக்கு போதும் திறமை உள்ளவர்கள் ஜெயிக்கட்டும் விஜய்

 12. நன்றாக உள்ளது

 13. ரசம் சொட்டும் கவிதை, ரொம்ப அருமையாக இருக்கிறது, வாழ்த்துகள்.

 14. இதுதான் கிறக்கம்.வாழ்த்துக்கள் விஜய்.நான் சத்தியமா கவிதைப் போட்டிக்கின்னு கவிதை எழுதலப்பா.

 15. வாவ்!..விஜய்,நின்னு ஆடுறீங்க!ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா!கலக்குங்க!வாழ்த்துக்கள்!

 16. நாநுனி கலந்து பிரிப்பது எவனென்றேன்கடவுளொருவன் இருப்பது தெரியாமலேயே……………….//கடவுளாகும் பொருள் தேடும்பொழுது கடவுளையும் கடவு…அருமை விஜய் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

 17. @ கவிக்கிழவன்மிகுந்த நன்றி நண்பா விஜய்

 18. @ யாத்ராதங்களின் முதல் வருகையும் வாழ்த்தும் என்னை மிகுந்த சந்தோஷத்துக்கு உள்ளாக்கியது தங்களுக்கு சமீபத்தில் திருமணமானதாக அறிந்தேன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி நண்பா விஜய்

 19. @ ஹேமா வாங்க ஹேமா உங்க கவிதையைத்தான் ஆவலோட எதிர்பார்த்து இருக்கேன் நீங்க எழுதமாட்டேன்னு சொல்லக்கூடாது சும்மா அடிச்சு தூள் கிளப்புங்க விஜய்

 20. @ பா.ராஜாராம் நன்றி மக்காஏதொ உங்க கூட நானும் இருக்குன் அதுவே எனக்கு மிகபெரிய பரிசு மிக்க நன்றி மக்கா

 21. @ சந்தான சங்கர் எப்பவும் என்னுடன் இருக்கும் நண்பர் நீங்கள் உங்களது வெற்றி எனது வெற்றி நன்றி நண்பா விஜய்

 22. அண்ணா அருமையான பதிவு.. கலக்குங்க வெற்றிபெற வாழ்த்துக்கள்..

 23. நெஞ்சை தொட்டது கவிதை. மிகவும் பிடித்திருக்கிறது.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 24. நன்றி சிவாஜி சங்கர் நீங்கள் இன்னும் போட்டிக்கு எழுத வில்லையா விஜய்

 25. நன்றி தாமு விஜய்

 26. வாழ்த்துகள் விஜய்.. உண்மையாவே இந்த கவிதை .. "கள்" தான். அதிலும்//பெருமழைக்கு பின் இலைநுனி கசியும் துளிநீராய் நாசியில் குங்கிலிய குமிழ்நீர் //அருமை!

 27. @ புபட்டியன் தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி விஜய்

 28. //குரும்பூடலுக்கு பிறகு குனிந்து நவின்ற குறுஞ்சிரிப்பு //SUPER…வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே…

 29. @ பலா பட்டறை மிகுந்த நன்றி நண்பரே தங்களின் மனமுவந்த வாழ்த்துக்கு விஜய்

 30. நல்ல கவிதை….வாழ்த்துக்கள் அன்பரே…

 31. @ பாலாசிநன்றி நண்பரே விஜய்

 32. நல்லா இருக்கு..! நண்பரே…!

 33. நல்லா இருக்குங்க அண்ணே!- V என்கிற குரு

 34. நன்றி சக்தி தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் விஜய்

 35. நன்றி குரு தம்பி தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் விஜய்

 36. உவமைகள் எல்லாம் உணரப்படுகிறது… உங்கள் வார்த்தைப் பிரயோகத்தில்.. அருமையான கவிதை…நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…

 37. நன்றி தோழி தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் விஜய்

 38. காதலும் காமமும் இயற்கையும் கலந்த கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 39. நன்றி ஸ்ரீராம்தங்களின் வாழ்த்துக்கு மிக மிக நன்றி விஜய்

 40. வாழ்த்துக்கள்!

 41. நல்லா இருக்குங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்

 42. நன்றி உழவன் தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கு

 43. @ angel பதினாலு வயசுதானா?நம்பமுடியவில்லை உங்க பதிவுகளை பார்த்தபின் வாழ்த்துக்கள் விஜய்

 44. பெருமழைக்கு பின் இலைநுனி கசியும் துளிநீராய் நாசியில் குங்கிலிய குமிழ்நீர் //கவிதை மிக அழகு…. வெற்றிபெற வாழ்த்துக்கள் விஜய்.

 45. அழைத்தவுடன் ஓடோடி வந்து மனமார்ந்து வாழ்த்திய நண்பனுக்கு நன்றிகள் கோடி விஜய்

 46. விஜய்.நான் சரண்டர் நண்பா. வெற்றி பெற வாழ்த்துக்கள்

 47. Kavidhai Super-nnu naan sollavum venuma? Vandha comments parthale podume! Enyway Best Wishes for the competition ——— Vidya Senthil, Madurai.

 48. வாங்க நவாஸ் தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி ப்ரியம் சுழித்தோடும் வெளியை விடவா ?நான் சரண்டர் ஆகிறேன் தங்களின் அன்பிற்கு விஜய்

 49. Thanks Vidyasenthil Vijay

 50. காதல் உணர்வு மிகுதியாய்புதிய யுக்தியில் புதிய வார்த்தைகளுடன் அருமையா வந்துருக்கு விஜய்வெற்றி பெற வாழ்த்துக்கள்

 51. மிக்க நன்றி வசந்த் தங்களின் முதல் வருகைக்கும் ஐம்பதாவது வாழ்த்துக்கும் விஜய்

 52. அழகான கவிதை. எனக்கும் காதலிக்க வேண்டும் போல இருக்கிறது 😀 வெற்றி பெற வாழ்த்துக்கள் !

 53. நன்றி அரவிந்தன் தங்களின் முதல் வருகைக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கும் விஜய்

 54. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு விஜய்.இந்த கவிதைக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு வெற்றி பெற.வாழ்த்துக்கள். !!!

 55. @ பூங்குன்றன்நன்றி நண்பா தங்களின் முதல் வருகைக்கும் வெற்றி வாழ்த்துக்கும் விஜய்

 56. test3

 57. கவிதையில் காதல் பாசம் அதிகமாக உள்ளது

  • THanks Friend

   Vijay


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: