வறுமைக்கோடு


பிய்ந்த பிரமிட் கூரையின்
காய்ந்த காகித கதவு

பெருக்கல் குறிகளின்
செவ்வக இணைப்பு

கதிர் மறுக்கும்
புங்கச் சாமரம்

நெளிந்த உலோகத்தில்
நெத்திலி கயல்

இயைந்த வாழ்வு
திரிந்தது

பாசத்துடன் பாஸ்மதி
குறைவிலா குவார்ட்டர்
பட்டா பெட்டி அறையில்
சிரிக்கும் காந்திகள்

இடைத்தேர்தல்
இடையிடையே வராமல்
அடிக்கடி வரணும்……..

Advertisements
Published in: on December 30, 2009 at 5:32 am  Leave a Comment  

காதல் எக்ஸ்டஸி

பிரமச்சரியம் குலைத்ததுனது 
முதல் பார்வை 

நிதம் சுழன்றதுன்
நினைவுத் திகிரி 

நாக்குலர்ந்து நடுங்கி 
வாக்குரைத்த  காதல்  
 

குரும்பூடலுக்கு பிறகு 
குனிந்து நவின்ற குறுஞ்சிரிப்பு 

லட்சண சாத்திரத்தின்
உச்ச பாத்திரம் நீ

இருவிழி தியானத்தில் 
அடங்கியதெனது ஆழ்மனம்

அரவப்பின்னல் அசைய 
படமெடுத்தாடுமெனது குண்டலினி 

சுளிக்கிய சிரிப்பை 
க்ளிக்கிய அகப்படம் 
நெஞ்சப்பைதனில்

காற்சதங்கை  மணி 
எனதுயிரிசையின் ஜி மேஜர் 

காற்று திறந்த கதவில் 
உன் வருகை 
சுகந்த ஆக்சிஜன் 
நுரையீரல் நிரப்பியபடி 

தழுவ கரம் பிடிக்க,
வேண்டும் என்றே விலக்கினாய்

திமிங்கலச் சந்தையில்  
அயிரை மீன்கள் அபூர்வம் 

உச்சத்தின் மிச்சத்தில் 
குழந்தைகளாய் நாம் 

பெருமழைக்கு பின் 
இலைநுனி கசியும் 
துளிநீராய் நாசியில் 
குங்கிலிய குமிழ்நீர் 

நாநுனி கலந்து 
பிரிப்பது எவனென்றேன்

கடவுளொருவன் இருப்பது 
தெரியாமலேயே………………. உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ 
நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.Published in: on December 8, 2009 at 9:54 am  Comments (58)  

விஞ்ஞிய ஞானம்


ராட்சத சிறகுகளின் 
ரகசிய உற்பத்தி

சதுரப்பெட்டியின்னூடே
சமைக்கும் நட்பு

விரல்நகவில்லையில்
விண் தொடர்பு

ஆழியினாழத்தில் 
அகலப் பாதை

கதிரோனின் கற்றைகள் 
கரும் சேமிப்பறையில்

அகவணுச்சிதைவை
அறுக்கும் கருக்கொடி திசுக்கள்

அட்டையின் உரசலில் 
ஆயிரமாயிரம்

மரபணு மாற்றத்தால் 
மலடான கத்தரி

கருவரைக்காமம் 
கண் மூடிய கடவுள்

ஞானம் விஞ்ஞியதால்…………………..


Published in: on November 30, 2009 at 7:25 pm  Comments (30)  

தெய்வப்பா

தொந்தியுடை துதிக்கையானின் துவிகரம் பற்றி
நந்தியுறை நாதனின் கங்கைச்சிரம் – பணிந்து
அந்திமதி மெல்லியள் அங்காளி துதித்து
சிந்திய வெண்பாவுனக்கு வடிவேலே


துள்ளிக் காவடி தூக்கி துணை
வள்ளி சமேத காட்சி – நெஞ்சில்
அள்ளி தெளித்த தமிழில் உன்னழகைக்கண்டு
வெள்ளி முளைத்து வீழுமே


ஏவல்பிணி எரித்து எனையாட்கொண்டு கொக்கரிக்கும்
சேவல் கொடியோனே மனதொடிந்த – மங்கையர்க்கு
காவல் உனையன்றி வேறெவர் பூவுலகில்
அவல்சுவை மாலின் மருமானே


(ஒரு சிறு முயற்சி தவறு இருந்தால் மன்னிக்கவும்)

Published in: on November 26, 2009 at 5:34 pm  Comments (26)  

மாண்புமிகு பிச்சை

இடுங்கிய கேட்ராக்ட் கண்கள்
சீப்பரியா சிக்கு மயிர் 
சிரிப்பரியா காய்ந்துதடு

நெஞ்சுக்கூடு காட்டும்
சல்லடை சட்டை

ஒட்டிய வயிறு
வெற்று வட்ட தட்டு போல 

கிழிந்த மூட்டைக்குள்
மாற்றாத சட்டையும்,
குடும்ப படமும்

யாரோ ஒருவனின் தந்தை
எவனோ ஒருவனின் சகோதரன்

அனுதினம் ஆலய வாசல்
உய்விக்க மறுத்த இறைவன் 

ஒருவேளை சோறிடு
போதுமென்று சொல்ல வை

அவன் கண்களில்
இறைவன் நீ………………. 

Published in: on November 22, 2009 at 10:15 am  Comments (34)  

மலட்டு மரபணுமதுநுரை நனைந்த கண்டம்

நுண்திரை விழிநுகர்வு

சிறுதிரை சுழியில் சிக்கிய கொடுமூளை

மாதிரையின் முன் மண்டியிட்ட மனிதம் 


கையூட்டுக்கு காக்கி 

கற்பழிக்க காவி 

கரை சுரண்ட கறைவேட்டி

பெண்கருவழிக்க ரவிக்கையணியாளின்
மார்தரா கள்ளிப்பால் 

உயிரணுவற்றவனின் துணைக்கு 
மலடிப்பட்ட மகுடம் 

வீதியில் செவியடைத்து செத்தவனை சீந்தாது 
காதலியின் கரம்பிடித்து காமப்பயணம் 

கால் செத்தவள் நிற்க 
மனம் செத்தவன் அமர்ந்திருக்கிறான் 

கொட்டுமழையில் இனம் அழிய 
குளிர்வறையிலிருந்து குடையறிக்கை

வேசியிடம் கடன் சொல்லும் 
காமபாக்கியவான்கள் 

அனைத்தும் ஒரே குறையால் 
ஜெனிடிக் அப்செஷன் ……………………

Published in: on November 20, 2009 at 4:15 pm  Comments (27)  

ரேடிகல் உலகு

வைரல் உறவுகள் 
பாக்டீரிய பாசங்கள்  

அம்மிக்கிடையில் அகப்பட்ட 
பூண்டு பற்களாய்
இனத்தின் முகம் நசுக்கி 
பூஜை – புத்தனின் பல்லுக்கு 

அண்டத்திலுள்ள நைட்ரஜன் 
மூட்டைகளில் யூரியாவாய் 

786 திருப்பி சம்ஸ்க்ருதத்தில் 
எழுதினால் ஓம் 
புரியாமல் மோதும் 
போரிச கொள்கை புழுக்கள் 

ஸ்டெம்செல் காலத்தில் 
சாதீய வோல்கோனாக்கள் 

பணம் கொடுத்து ஓட்டு
பங்கு சந்தையை சுரண்ட 

அலைபேசி கோபுரத்தால் 
அழிந்து போன சிட்டு குருவிகள் 

தூர் வாரப்படாத ஏரியில் நின்று 
நதிநீர் இணைப்பு நரித்தனங்கள் 

அழுகிய மூளை சிந்தனைகள் 
பழகிப் போன பாசுரங்களாய் …………


Published in: on November 15, 2009 at 8:15 am  Comments (29)  

வெம்புவி


வட்டப்புவியின் 
நெற்றியில் பொறி

உருகும் ஆர்க்டிக் 
நகரும் பிளேட்லெட் 


கதிர்புகா கருவனம்
நெடிய கரும்பலகையாய்


கரப்பானை ஒத்த 
கவர்ச்சி பாலிதீன் 


சதாபிஷேக மரங்கள் 
நிதம் விறகுக்கு 


குளிர்சாதன ப்ளுரோ
புவிவதனம் எரிக்கும் 


இயற்கை சிதையால் 
செயற்கை சுவாசம் 
வருமிருண்ட காலத்தில் …………..
Published in: on November 12, 2009 at 10:25 am  Comments (31)  

நெஞ்சில் நிறைந்தவர்களும் – நெஞ்சை எரிப்பவர்களும்

என்னை மாட்டி விட்ட பா.ராவிற்கு நன்றிகள் கோடி

1. அரசியல்வாதிகள்

பிடித்தவர் : எம்ஜியார் (வள்ளலாக வாழ்ந்தவர்)

பிடிக்காதவர் : கருணாநிதி (ஈழ பிரச்சினையில் அவரது அணுகுமுறை )

2. நடிகர்கள்

பிடித்தவர் : ரஜினி/கமல் (இருவரின் தனித்திறமைகள்)

பிடிக்காவர் : விஷால் (பார்க்க முடியல)

3. கவிஞர்கள்.

பிடித்தவர் : அவ்வையார், (தற்போது அடர்த்திக்கு நேசமித்ரன்/ யதார்த்தத்திற்கு பா.ரா)

பிடிக்காதவர் : பா.விஜய் ( ஓவர் ஸ்டைலு )

4. நடிகைகள்

பிடித்தவர் : அனுஷ்கா (மிக அழகு (தெலுங்கில்) )

பிடிக்காதவர் :  நயன்தாரா ( வர வர முகம் நாம் எதிலிருந்து வந்தோமோ அது மாதிரி ஆகுது)

5. இயக்குனர்கள்

பிடித்தவர் : கெளதம் (நல்ல entertainer)
பிடிக்காதவர் : பேரரசு ( யப்பா  தாங்க  முடியலை )

6. இசை அமைப்பாளர்கள்

பிடித்தவர் : இளைய ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்  (முன்னவர் எனக்கு ராகங்களையும் பின்னவர் எனக்கு மியூசிக் ஆர்கனையும் கற்று தந்தவர்கள் )
பிடிக்காதவர்  : தேவா/சங்கர்கணேஷ் (முன்னவர் காப்பி மாஸ்டர், பின்னவர் அலப்பறை )

7. விளையாட்டு வீரர்கள்

பிடித்தவர் :  விஸ்வநாதன் ஆனந்த் ( உலக சாம்பியனை விட்டா வேறு யாரு) 
பிடிக்காதவர் :  முரளி கார்த்திக் (பந்தா தான் பவுலிங்ல விஷயம் இல்லை )

8. ஊர்கள்

பிடித்தது : திருச்சி (தமிழ்நாட்டின் மையமல்லவா)
பிடிக்காதது :  சென்னை (என்னமோ புடிக்கலை )

9. பாடகர்கள்
பிடித்தவர் : ஹரிஹரன் ( என்ன ஒரு லாவகம்)
பிடிக்காதவர் : புஷ்பவனம் குப்புசாமி (என்னமோ புடிக்கலை)

10. பாடகி

பிடித்தவர் :  உமா ரமணன் ( கேட்க இனிமையா இருக்கும்)

பிடிக்காதவர் : சுசீலா ( ஜெனரேஷன் கேப் )

நான் மாட்டிவிடப்போகும்  நண்பர்கள் இருவர்

தேனம்மை லக்ஷ்மணன்

பாலா

Published in: on November 5, 2009 at 5:56 pm  Comments (34)  

இயற்கையின் நியதி

ஒடிசல் தேகத்தில்
பச்சை ரோமங்கள்

அரசுபயச்சேலையில்
முக்கோண  தூளி

சகதியில் வேர்வைத்து
குருதியாய் புகட்டிய

பாலுரைந்த உதட்டின்
மிச்சத்தில் ஈக்கள்

இடைப்புல் கழித்து கிழாரின்
கரமழுத்திய கரும்பணக்காமம் 

விசும்பி வீலென்ற அரவம்
மிச்சப்பாலும் மாரில் வற்றியிருந்தது 

Published in: on November 2, 2009 at 6:35 pm  Comments (26)