தொடர்பதிவு

சகோதரி தேனம்மை அவர்களுக்காக



1. A- Available/single – Available எப்பொழுதும் நட்புக்கு 


2. B – Best friend – இடம் பத்தாது


3. C- Cake or pie – இரண்டுமில்லை


4. D – Drink of choice – டீ (Tata life)


5.E – Essential items you use everyday – Gold kings


6. F- Favorite colour – வெளிர் பச்சை


7. G – Gummy bears or worms – ரெண்டுமில்லை


8. H – Hometown – முசிறி


9. I – Indulgence – புத்தகங்கள்


10. J – January/Feruary – ஜனவரி 27


11. K – Kids and their names – 2 பையன்கள் விஸ்வேஸ்வரன், சூர்யேஸ்வரன்


12. L – Life is incomplete with out – புன்னகை


13. M – Marriage date –  05.06.2003


14. N – Numberof siblings – 1 தங்கை ஸ்ரீவித்யா


15. O – Oranges or Apples – குளிர் ஆப்பிள்


16. P – Phobias/ Fears – bibliokleptomania


17. Q – Quotes for today – WINNERS DON’T DO DIFFERENT THINGS. THEY DO THINGS DIFFERENTLY


18. R – Reason to smile – எனது இரு கவிதைகளால்


19. S – Season – குளிர்


20. T- TAG 4 PEOPLE – புலவன் புலிகேசி, ஜீவன், சந்தான சங்கர், ரசிகை 


21. U- Unknown fact about me – Astrologer


22. V – vegetables you dont like – பாகற்காய்


23. W – Worst habbit – மிதமிஞ்சிய கோபம்


24. X – Xrays you had – இரண்டு பற்களுக்கு 


25. Y – Your favourite food – பருப்பு நெய் சாதம்


26. Z – Zodiac sign – கும்பம்


அன்பிற்கு உரியவர்கள் –  குடும்பத்தினர், நண்பர்கள் இப்பொழுது வலையுலக நண்பர்கள்


ஆசைக்குரியவர் – நிர்மலதா


இலவசமாய்க்கிடைப்பது – இலவசங்களை வெறுக்கிறேன்


ஈதலில் சிறந்தது – அன்னதானம்


உலகத்தில் பயப்படுவது – தீவிரவாதம்


ஊமை கண்ட கனவு – எப்படி சொல்ல முடியும்


எப்போதும் உடன் இருப்பது –  lighter


ஏன் இந்தப் பதிவு – சகோதரிக்காக 


ஐ – ஐஸ்வர்யத்தில் சிறந்தது – பிறர்க்குதவும் பணம்


ஒரு ரகசியம் – தியானமே பிரபஞ்ச ரகசியம்


ஓசையில் பிடித்தது – தபேலா


ஒளவை மொழி ஒன்று – ஆத்திச்சூடி 2009

Published in: on November 1, 2009 at 10:31 am  Comments (24)  

முற்காதல்

உன் 
விழி மின்கசிவு 
இதயத்தீவிபத்து 


கன்னக்கோலக்குழி 
ஆண்மை உறையும் கூடு 


நகமிடுக்கு கருந்துகள் 
புனர்ஜென்ம மருந்தமுதம் 


நாசி வளைகோடுகள் 
ஆயுளின் அட்ச தீர்க்க ரேகைகள்


கருப்பை வடிவக் காதுமடல்
புரளுமிறு மயிர்களில்
உயிரின் ஊசல் 


காமம் மெய்த்தபின் 
காதல் பொய்க்கும் 


உதட்டு சுழியில் 
உன்மத்தம் பிடித்து 
துளி இதழ் விடமருந்தி 
பொய்ப்பது எந்நேரம்……………………



Published in: on October 30, 2009 at 4:11 pm  Comments (22)  

என் லிபி

வெள்ளை மனதின்
கருப்பு ரகசியம்

கோண வாழ்க்கையின்
சதுர வரலாறு

முன் நினைவுகளின்
முடிவுறா பக்கங்கள்

உயிர் கரைத்த காதல்
கவிதை ஒத்திகை   
அகம் சிலிர்த்த நட்பு
புலம் பெயர்ந்த வீடு
திரை மறைவரங்கு
கருமிருட்டு வெண்புகை
மயான மதுநுரை
குரங்குபெடல் குதியாட்டம்
வெட்டிய வகுப்புகள்
கலங்கியதால்
கரைந்த எழுத்துகள்

மரத்தும் மரித்தும் போகாது
மண்ணுள்ளவரை ………………

Published in: on October 27, 2009 at 6:14 am  Comments (29)  

யுகப்பொறுமை

விதையின்
பொறுமை
விருட்சம்

பூமியின்
பொறுமை
சுழற்சி

ஆழியின்
பொறுமை
அலை

சிந்தனையின்
பொறுமை
புரட்சி

நாட்களின்
பொறுமை
வருடம்

காதலின்
பொறுமை
கவிதை

காமத்தின்
பொறுமை
கடவுள்

உறங்கும்
பொறுமை
இறப்பு

காற்றின்
பொறுமை
தென்றல்   

கல்லின்
பொறுமை
சிற்பம்

தாய்மையின்
பொறுமை
நாம் ……………………………………………………..

Published in: on October 24, 2009 at 5:35 pm  Comments (14)  

சக்கர வண்டி

ஒரு வயசில
ஆட்டை வித்துஆடுகுதி வண்டி

மூணு வயசில
உங்காத்தா மூக்குத்தி முறிச்சு
மூணு சக்கர வண்டி

பதிமூணு வயசில
நாலு மூட்டை கம்பு வித்து
சைக்கிளு


இருபது வயசில
கடைசிக்காணி வித்தப்ப
மோட்டார் சைக்கிளு

வேலை கிடைச்சு
புதுக்காரு வாங்கின


பொண்டாட்டியும்
புதுவீடும்
கட்டுன


பேத்தியோட வானத்துல
பறந்து அசல்நாட்டுக்கு
போயிட்ட


ஒத்தையாய் தனிச்சிருக்கேன்
சக்கர வண்டியி…………………………..

Published in: on October 22, 2009 at 10:11 am  Comments (27)  

உறைவீடு

விலை பேசி
 

விற்று முடித்து
 

கத்தைப் பணம் எண்ணி
 

தரகு கமிஷன் தந்து
 

வேகாத வெயிலில்
 

சற்றே இளைப்பாறினேன்
 

விற்ற வீட்டின் நிழலில் ……………………………….

Published in: on October 20, 2009 at 10:07 am  Comments (20)  

திருமங்கை


குரோமோசோம்கள் குழம்பிய
குளிர் கருக்கள்


ஹார்மோன் குறைநீட்சியால்
மலராத மொட்டுக்கள்


பிறழ்விந்தால் பிறந்த
கூவாக குயில்கள்


நவதுவாரங்களால் நாம்
அனைவரும் நவமே
அறம் பிளந்து
இகழ்தல் முறையோ


பால் உணவிற்காக
அரக்கர்களின்
பாலுணர்வு தணிக்கும்
அசிங்க அவலங்கள்


அரவாணிகள் என்பது
அரைஞானிகளின்  அறிவு
கலைவாணிகள் என்பது
முற்றுணர்ந்தோர் மூச்சு


சரிவிகித சமன்பாட்டில்
ஒருவிகிதமாவது தருவோம்


நஞ்சற்ற நங்கைகளுக்கு
நேசக்கரம் நீட்டுவோம் 

Published in: on October 19, 2009 at 12:07 pm  Comments (14)  

காதல் குவாண்டம் – 1

மாமிசப்பட்சி தாவரம் நீ
 

சிக்கிய வட்டப்புழு நான்
 

மெலிந்த இசையில்
 

சூரியவிழிப்பிற்கு முன்
 

கள்ளுறவு கொண்டோம்
 

என் நிதியிருப்பு அளந்து
 

எதிர் போர் உன்பக்கம்
 

மூளையின் பேசும்பகுதி உறைந்தது
 

பிரிந்தோம் நாம் மணற்துகள்களாய்

Published in: on October 16, 2009 at 6:39 am  Comments (14)  

Happy Diwali

எனது நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் எனது இரு கவிதைகளின் தீபாவளி வாழ்த்துக்கள்.
Published in: on October 16, 2009 at 5:37 am  Comments (8)  

காதல் குவாண்டம்



வீனஸ் ப்ப்ளை ட்ட்ராப்பாய்   நீ


நேமடோட்ஸ் ஆக நான்


டயடோனிக் ஸ்கேல் மிதந்தபொழுது


கோதூளி லக்னத்தில் கலந்தோம்


கால சர்ப்பமாய்


பி இ ரேஷியோ பார்த்து


சிசிலியன் விளையாடி தோற்றோம்


வெர்னிக்ஸ் ஏரியா மரத்தது


உடைந்தோம் குவாட்கோர் சில்லுகளாய்

Published in: on October 15, 2009 at 6:55 am  Comments (10)